25.7 C
Jaffna
February 23, 2024
இலங்கை

கிளிநொச்சி துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

கிளிநொச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் (இரணைமடு) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு விசாரணைப் பிரிவினர் தேடி வந்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று பகல்  கணேசபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுகிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

22, 24 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்மை இரண்டு நாள் தடுத்து வைத்து கடுமையாக தாக்கியதற்கு பழிவாங்கவே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் மாத்திரமே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களையும், தடயப்பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழக மாணவன் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்: கூலிப்படை தாக்குதல் முயற்சியா?

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ஆர் காலமானார்!

Pagetamil

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும்போதே விபத்து!

Pagetamil

காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க நகை திருடிய இளைஞன் கைது: யாழில் சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!