Site icon Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

பாணந்துறை கிரிபெரியவில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் கொரோனா உடைகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹிரண பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தக் களஞ்சியசாலையில் ஏறக்குறைய 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டாலும், இது தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் அளிக்கப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க ஹொரண களுத்துறை மொரட்டுவ மற்றும் தெஹிவளை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகள் அழைக்கப்பட்டன.

கொரோனா உடைகள், முகக்கவசங்கள், சத்திரசிகிச்சையின் போது அணியும் ஆடைகள் உள்ளிட்ட பல சுகாதார உபகரணங்களும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி தெஹிவளை, களுத்துறை மற்றும் மொரட்டுவ மாநகர சபைகளின் தீயணைப்புப் பிரிவுகளும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் உட்பட 11 தண்ணீர் பவுசர்கள் மற்றும் முப்பது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தின் போது கட்டிடத்திற்குள் எவரும் இருக்கவில்லை எனவும், தீ விபத்து தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version