24.9 C
Jaffna
October 14, 2024
Pagetamil
கிழக்கு

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு ஓட்டமாவடி மக்கள் வங்கியில் நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (2) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது சந்தேக நபர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர். சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் விடயங்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபர்கள் மூவரையும் தொடர் விசாரணைக்காக எதிர்வரும் 16.06.2023 வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அங்கு கடமைபுரிந்த ஊழியர்கள் சிலரால் வங்கியில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி, 7 இலட்சத்து 85412.50 சதம் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டிருந்ததாகவும் இச் சம்பவம் வங்கி நிர்வாகத்திற்கு தெரிய வந்தமையினையிட்டு குறித்த வங்கியின் தலைமைச் செயலகத்தினால் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையின் பின்னர் 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வங்கியின் பாதுகாப்பு பெட்டக திறப்பு இரண்டு பெண் உத்தியோகத்தர்களிடம் இருந்தது. ஆண் உத்தியோகத்தர் ஒருவர் அந்த சாவியை பெற்று, பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடி, ஓட்டமாவடியிலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்திருந்தார்.

திருட்ட பற்றிய தகவலை வங்கி தெரிந்து கொண்டதும், பிரதான சந்தேகநபரான ஆண் உத்தியோகத்தர் சுமார் ஒரு கோடி ரூபாவை மீள செலுத்தியிருந்தார்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வியாழேந்திரன் தரப்பு உள்ளிட்ட 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Pagetamil

திருமலையில் மூன்று அரசியல் கட்சிகள் உட்பட மூன்று சுயேட்சைக் குழுக்களினது வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

சவப் பெட்டி தூக்கி மக்கள் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Pagetamil

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்

Pagetamil

Leave a Comment