இரத்தினபுரி, கலவான பிரதேசத்தில் அமைந்துள்ள அரச பாடசாலை ஒன்றின் நடன ஆசிரியையாகவும், பதில் கடமையாற்றும் அதிபராகவும் செயற்பட்ட ஆசிரியை ஒருவரால் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கலவான பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மாணவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்களுக்குப் பிறகு இந்த இரண்டு மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லத் தயங்குவது குறித்து பெற்றோர் விசாரித்ததில், இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. இரண்டு மாணவர்களும் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் போதே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏழாம் தரத்தில் சித்தியடைந்த பின்னரும் பாடசாலை செல்ல தயக்கம் காட்டுவதாகவும் கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டையடுத்து, ஆசிரியை பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நடன ஆசிரியை திருமணமாகாதவர் எனவும் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.