30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாம் நாட்டுக்கு வந்தவுடன் கைது செய்யப்படலாம் எனத் தெரிவித்து, தம்மைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த இந்த அடிப்படை உரிமை மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கண்டி மாநாட்டில் பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்  கூறுகிறார்.

இதுதவிர, நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவும் பெற்றுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மத தலைவர்கள் குழு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment