இலங்கை

வவுனியாவில் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய இராணுவச் சிப்பாய்க்கு 15 வருட கடூழிய சிறை

பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு படுத்திய குற்றச்சாட்டில் சிப்பாய் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று தீர்ப்பளிக்க

2013ம் ஆண்டு மே 14 ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணையின் அடிப்படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் கடமையில் இருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம் பெற்று நேற்று தீர்ப்புக்காக தவணை இடப்பட்டு இருந்தது. சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளிலும் சிப்பாய் குற்றவாளியாக இனம் காணப்படுவதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுமியை பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து அழைத்துச் சென்றார் என்ற முதலாவது குற்றச்சாட்டுக்கு ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தானை விதிக்கப்பட்டது. பதின்ம வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டை சந்தேகநபர் வழங்க வேண்டும் என்பதுடன் ரூ.5000 தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் தவறின் ஒரு வருட சாதாரண தொலைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!