குற்றம்

:பாலியல் வல்லுறவு வழக்கு: பொய்ச்சாட்சியமளித்த யுவதிக்கு எதிராக விசாரணை!

பலாத்கார வழக்கில் முறைப்பாடு செய்தவர் பொய்யான சாட்சியங்களை வழங்கியமையினால் குற்றஞ்சாட்டப்பட்டவரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ள காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்த்யா நாணயக்கார, முறைப்பாட்டாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அஹங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அல்கேவத்தையைச் சேர்ந்த சமன் பிரித்தி ஜயலத் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட நபரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி திட்டகல்ல, அஹங்கம பொலிஸ் பிரிவில் 15 வயது மற்றும் ஆறு மாத சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக காலி மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கின் ஆரம்பத்தில், அப்போது பாடசாலை மாணவியாக இருந்த புகார்தாரர், தனது கைத்தொலைபேசி மூலம் சந்தேக நபரை அடையாளம் கண்டுகொண்டதாகவும், அதன்படி, சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்டவர் துவிச்சக்கர வண்டியில் வந்து அவரை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் அவரை பலாத்காரம் செய்தார்.

ஆனால் விசாரணையின் போது, ​​குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுகளை நிரூபிக்கத் தவறியதால் சந்தேகநபரை விடுவிக்க முடிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டடில் தற்போது 24 வயதாகும் வாதிக்கு  எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியையும், காதலனையும் கத்தியால் குத்திய கணவன் கைது!

Pagetamil

பகல் பராமரிப்பு நிலையத்தில் 4 வயது சிறுமியிடம் கைவரிசை காட்டிய 74 வயது முதியவர் கைது!

Pagetamil

மன்னார் முச்சக்கர வண்டி சாரதி சங்க தலைவர் மீது தாக்குதல்

Pagetamil

நெல்லியடியில் மாணவிகளுடன் சேட்டை விடுவதை தொழிலாக கொண்ட 2 ரோமியோக்கள் கைது!

Pagetamil

முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட யுவதி 4 பேரால் கூட்டு வல்லுறவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!