இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் பிரதி அதிபர் காயம்

அம்பலாங்கொடை ரண்டோம்பே பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலப்பிட்டிய மிகெட்டுவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதி அதிபர் தர்மசோக பாடசாலைக்கு வரும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவரால் சுடப்பட்டதில் காயமடைந்த நபர், தான் பயணித்த மோட்டார் சைக்கிளிலேயே அம்பலாங்கொடை பொலிஸாருக்கு வந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், அம்பலாங்கொடையில் பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வட்டுகெதர, அடடோல பிரதேசத்தில் நேற்று (25) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை கோடீஸ்வர வர்த்தகர் ஹலம்பகே பேமசிறியின் கொலைச் சம்பவத்தில் தற்போது பிணையில் உள்ள பிரதான சந்தேகநபரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பக்கத்து வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்கள் காயமின்றி தப்பித்து விட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!