Site icon Pagetamil

தண்டவாளத்தில் தொலைபேசியில் பேசியபடி சென்ற இருவர் பலி

வெயங்கொட, வந்துராவ பகுதியில் இரண்டு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

அதே பகுதியில் வசித்து வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் புகையிரத பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலையில், காலை சுற்றுலா செல்ல திட்டமிட்டு வதுரவ புகையிரத நிலையத்தை நோக்கி புகையிரத பாதை வழியாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

புகையிரத பாதையில் பயணித்த போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு இளைஞர்களும் தங்களது தொலைபேசிளில் உரையாடியபடி சென்றுளள்னர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version