இலங்கை

கிளிநொச்சியில் இலவச குழாய் வழி குடிநீர் வழங்குவதற்கான நடமாடும் சேவை

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உலக வங்கியின் நிதியுதவியின் கீழ்
நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிளிநொச்சி
கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பாரதிபுரம், பொன்னகர் கிராமங்களுக்கான
இலவச குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடமாடும் சேவையினை
மேற்கொண்டுள்ளது.

பொன்னகர், பாரதிபுரம் கிராமங்களில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்
சபையின் நடமாடும் சேவை மூலம் இலவச குடிநீர் இணைப்பை
பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை பெற்று பூரணப்படுத்தி 1500 ரூபா
வைப்பு பணத்துடன் இதுவரை விண்ணப்ப படிவங்களை செலுத்தாதவர்கள், உடனடியாக
எதிர்வரும் செவ்வாய் கிழமைக்கு (30) முன்னதாக விண்ணப்ப படிவங்களை பெற்று
பூரணப்படுத்தி செவ்வாய் கிழமை 155 ஆம் கட்டை ஏ9 வீதி கிளிநொச்சியில்
அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்தில் காலை
9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை 1500 பணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் வீடுகளுக்கான இலவச குழாய் வழி குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ள
முடியும் எனவும் இச் சந்தர்ப்பத்தை தவறாது பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!