கிழக்கு

‘மனைவி வேறொரு ஆணுன் இருந்தார்’; கணவன் எடுத்த விபரீத முடிவு!

திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசதுரை சுதாகரன் (27) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் குறித்த சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன்,பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இந்நிலையில் குறித்த மரணத்திற்கான காரணத்தை தான் தொங்கி இருந்த இடத்தில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சிக்கிய பலாப்பழ ஹெரோயின்

Pagetamil

அம்பாறையில் வளர்ப்பு புறா மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சி

Pagetamil

மட்டக்களப்பில் இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி: ATM உடைப்பு

Pagetamil

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை புறக்கணித்த கிழக்கு ஆளுனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!