தனது முன்னாள் மனைவியை கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்த கணவர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சட்டரீதியாக விவாகரத்து பெற்ற மனைவியைக் கடத்த முயன்ற கணவருக்கு 10 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும், 15,000 ரூபா அபராதமும், 1.2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கவும் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் அம்பலாந்தோட்டையில் வசிக்கும் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
விவாகரத்து பெற்ற ஆசிரியையான மனைவி அம்பலாந்தோட்டை நோனாகம பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் கடத்த முயற்சிக்கப்பட்டது.
விவாகரத்து பெற்ற மனைவி வேறொருவரைத் திருமணம் செய்யத் தயாராகி வருவதைக் காண முடியாத காரணத்தினால் சந்தேக நபர் ஆசிட் போத்தலை ஊட்ட முற்பட்டார். வாக்குவாதத்தின் போது அசிட் போத்தல் ஒன்று குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் மீது விழுந்து பலத்த காயம் அடைந்தார்.