தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரி வழங்குவது குறித்து பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1