தங்கக்கடத்தல் எம்.பி அலிசப்ரி ரஹீமுக்கு அரசாங்கம் உச்சபட்ச தண்டம் விதிக்கவில்லையென்பதை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டது.
இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
தங்கக்கடத்தல்கார்களுக்கு, அவர்கள் கடத்தும் தங்கத்தின் பெறுமதியில் 3 மடங்கு பெறுமதியான தண்டம் விதிக்கலாம் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
இதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். இது உயர்ந்த பட்ச தண்டம் எனவும், அதுபோல குறைந்த பட்ச அளவும் உள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், அண்மைக்காலத்தில் அலி சப்ரியிடமிருந்தே அதிக தண்டம் அறிவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1