Site icon Pagetamil

ஜனக ரத்நாயக்கவை பதவிநீக்கும் பிரேரணை சமர்ப்பணம்!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணையை ஆளுந்தரப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை முன்வைத்தார்.

இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில், ஜனக ரத்நாயக்க இந்த விவாத்தை பார்க்க அனுமதி கோரியிருந்தார். ஆனால், பாராளுமன்றத்தின் பார்வையாளர் கூடம் மூடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆனால் இன்று பாடசாலை மாணவர்கள் பார்வையாளர் கூடத்தில் இருந்தனர். வேறு பலரும் இருந்தனர்.

சட்டத்துக்கு முரணாக ஒருவரை பதவிநீக்க முயற்சிக்கிறீர்கள். இதில் ஏன் இவ்வளவு கலக்கமடைகிறீர்கள் என கேள்வியெழுப்பினார்.

விவாதம் நடந்த வருகிறது.

Exit mobile version