29.3 C
Jaffna
March 29, 2024
மலையகம்

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பணிப்பெண் மரண விவகாரம்!

கொழும்பில் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் பொலிசாரின் தாக்குதலை தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டினார்.

பதுளை, மடுல்சீயை சேர்ந்த பணிப்பெண் ஆர்.ராஜகுமாரியின் உடல் உரிய விசாரணைகள் இல்லாமல் புதைக்கப்பட்டாகவும், சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, முறையான உடற்கூற்றாய்வு பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

விமல் வீரவன்சவும் இதனை ஆதரித்தார்.

மனச்சாட்சியுள்ள யாரும் இந்த சம்பவத்தை ஆதரிக்க முடியாது என்றும், முறைப்பாட்டாளரான தொலைக்காட்சி தயாரிப்பாளர் முன்னிலையில் பொலிஸ் நிலையத்தில் பணிப்பெண் தாக்கப்பட்டதாகவும், தொலைக்காட்சி தயாரிப்பாளர் அந்த சம்பவத்தை தனது நண்பர்களுக்கு தெரிவித்து மகிழ்ந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்த விவகாரத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment