விளையாட்டு

குஜராத்தை வீழ்த்தி 10வது முறையாக ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஓஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

173 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா – ஷுப்மன் கில் கூட்டணி இம்முறை மெதுவான துவக்கம் கொடுத்தது. 3வது ஓவரில் இக்கூட்டணி பிரியவும் செய்தது. 12 ரன்களில் முதல் விக்கெட்டானர் சஹா. அவரை தீபக் சஹார் வீழ்த்த, அடுத்து வந்த கப்டன் ஹர்திக் பாண்டியாவை 8 ரன்களோடு நடையைக் கட்டவைத்தார் தீக்சன. இதனால் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் 55 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது குஜராத்.

இலங்கை வீரர்களான பத்திரன மற்றும் தீக்சனவை சமாளிப்பதற்காக களமிறக்கப்பட்ட சகநாட்டு வீரர் ஷானக, தீக்சனவின் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து மிரளவைத்தார். ஆனால், ஜடேஜா அவரை வீழ்த்தினார். ஜடேஜாவின் பந்தில் தீக்சனவிடம் கட்ச் ஆகிய ஷானக 17 ரன்களில் அவுட் ஆனார்.

சில நிமிடங்களில் டேவிட் மில்லரையும் (4 ரன்கள்) வந்த வேகத்தில் ஜடேஜா விக்கெட்டாக்கினார். ஒருபுறம் விக்கெட் சரிவுகள் நிகழ, அதுவரை குஜராத்தின் நம்பிக்கையாக இருந்த கில் நிதானமாக விளையாடி 42 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், அவரை அவுட் ஆக்கி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார் தீபக் சஹார்.

கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடி வரும் கில், அவுட் ஆனதும்தான் சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், அந்த நிம்மதியை குலைக்கும் வகையில் இம்பேக்ட் ப்ளேயராக வந்த விஜய் சங்கரும், ரஷீத் கானும் அதிரடியாக ஆடினர். ரஷீத் கான் சிக்ஸ், பவுண்டரி விளாச அவருக்கு பக்கபலமாக விஜய் சங்கர் இருந்தார்.

18வது ஓவர் வீச வந்த பத்திரன தனது 3வது பந்தில் 14 ரன்கள் எடுத்திருந்த விஜய் சங்கரை வெளியேற்றினார். அடுத்து பந்தில் நல்கண்டே ஸ்ட்ரைக்கை ரஷீத் கானிடம் கொடுக்கும் முயற்சியில் ரன் அவுட் ஆனார். இதனால் 136 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது குஜராத்.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் துஷார் தேஷ்பாண்டேவின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய ரஷீத் கான், மூன்றாவது கட்ச் ஆகி நடையைக்கட்ட சென்னை அணியின் கிட்டத்தட்ட வெற்றி உறுதியானது. ரஷீத் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட குஜராத் அணி அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி பந்தில் ஷமியும் அவுட் ஆக 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.

ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையாக 10வது முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் 6 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி தரப்பில் தீபக் சஹார், ஜடேஜா, தீக்சன, பத்திரன தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்

ரொஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், தர்ஷன் நல்கண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கட்ச் கொடுக்க, ஆரம்பமே ஆட்டம் காண நேர்ந்தது. ஆனால் அது நோ பேல் ஆனதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர்.

அடுத்து வந்த ஃப்ரீ ஹிட்டில் சிக்சரை ஹிட் செய்து ஃபோர்முக்கு திரும்பினார் ருதுராஜ். மறுபுறம் டெவோன் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களைச் சேர்ந்திருந்தது சிஎஸ்கே. 8 பவுண்டரி 1 சிக்சர் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 36 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தார். கான்வே நிதானமான ஆடி துணை நின்றார். 10 ஓவர்கள் முடிவில் 85 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை மோஹித் ஷர்மா பிரித்தார். அதன்படி 44 பந்துகளில் 60 ரன்களை குவித்த ருதுராஜ் கட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஷிவம் துபே 1 ரன்னில் விக்கெட்டாக ரஹானே 17 ரன்கள் வரை சேர்த்துவிட்டு நடையைக் கட்டினார். அடுத்து கான்வேவும் 40 ரன்களில் பெவிலியன் திரும்ப 17 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 137 ரன்களை சேர்த்திருந்தது. ஆரம்பத்திலிருந்த வேகம் இறுதியில் அகப்படவில்லை. அம்பதி ராயுடு அடித்த சிக்ஸர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் நீண்ட நேரம் அதை அவரால் தக்க வைக்க முடியவில்லை. ரஹானே எடுத்த அதே 17 ரன்களை ராயுடுவும் எடுத்து ஒற்றுமை காட்டிவிட்டு வெளியேறினார்.

தோனி களத்திற்கு வர ரவீந்திர ஜடேஜா உடனிருந்தார். ஆனால், மோஹித் ஷர்மா வீசிய பந்தை எதிர்கொண்ட தோனி, பந்தை தட்டிவிட அது நேராக ஹர்திக் பாண்டியா கைக்குள் ஐக்கியமானது; தோனி வந்த வேகத்தில் பெவிலியனைப் பார்த்து திரும்பினார். கடைசி ஓவரில் வந்த மொயின் அலியின் சிக்ஸர் பெரும் நம்பிக்கை. 180 ரன்களை சிஎஸ்கே எட்டுமா என எதிர்பார்த்த நிலையில் கடைசி பந்தில் ஜடேஜாவை அவுட்டாக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முஹம்மது சமி. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 172 ரன்களைச் சேர்த்தது.

குஜராத் அணி தரப்பில் முஹம்மது சமி, மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நூர் அஹமது, ரஷீத் கான், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது

Pagetamil

SL vs AFG 1st ODI | இலங்கை சார்பில் அறிமுகமாகும் 2 வீரர்கள்!

Pagetamil

‘என்னால் தூங்கமுடியவில்லை’: கடைசி ஓவரை வீசிய குஜராத் அணியின் மோஹித் சர்மா வேதனை

Pagetamil

ஐபிஎல் 2023: விருதுகள் வென்ற வீரர்கள்!

Pagetamil

ஐபிஎல் 2023: சுவாரஸ்ய புள்ளிவிபரங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!