சினிமா

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா?

கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார்.

இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. விடாமுயற்சி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லொகேஷன், மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கருக்கலைப்பு செய்தாரா?

Pagetamil

‘படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்; வேற மாதிரி இருக்கும்’: மாமன்னன் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்

Pagetamil

விஷால் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி?

Pagetamil

சுனைனாவின் ‘ரெஜினா’ பட டீசர்

Pagetamil

‘சாய் பல்லவியை காதலிக்கிறேன்… ஆனால் அவரிடம் நேரில் சொல்ல துணிவில்லை’: பாலிவுட் நடிகர் குல்ஷன்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!