முக்கியச் செய்திகள்

தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கு எதிராக போராடிய 9 பேர் கைது: பொலிசாருக்கு தனித்து நின்று ‘தண்ணி காட்டும்’ கஜேந்திரன் எம்.பி!

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலவந்தமாக தூக்கி ஏற்றி பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை.

இரவு நேரத்தில் தனிநபராக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவ நடவடிக்கை மூலம் கபளீகரம் செய்து, சட்டவிரோமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் , இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

எனினும், தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பொலிசார் பலாத்காரமாக போராட்டக்காரர்களை வாகனத்தில் ஏற்றினர். சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தினர்.

அவரை போராட்டக்களத்திலிருந்து அகற்ற பொலிசார் மேற்கொண்ட முயற்சி வெற்றியடையவில்லை. இதையடுத்து, விகாரைக்கு முன்பாக உள்ள காணியொன்றில் தங்கியுள்ள செ.கஜேந்திரன் எம்.பியை சுற்றிவளைத்து துப்பாக்கி ஏந்திய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் நகர முடியாமல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.

புதர் மண்டிய காணிக்குள் தற்போது இரவு வரையும் அவர் தனியாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ்காவலில் இன்று வைத்திருப்பதற்காக பொலிசார் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. கைதானவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லையென தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

நான் ‘இடும் சாதி’; கொழும்பில் வளர்ந்தால் சாதி பற்றி அறிந்திருக்கவில்லை: விக்னேஸ்வரன் பகிரங்க விளக்கம்!

Pagetamil

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

Pagetamil

இலங்கையில் பிரமிட் மோசடியில் ஈடுபடும் 8 நிறுவனங்கள்: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!