இந்தியா

தாய்க்காக கிணறு தோண்டிய 14 வயது சிறுவன்

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கெல்வே கிராமத்தில் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாய தொழிலாளியாக உள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடைசி மகன் பிரணவ் சல்கர் (14) 9-ம் வகுப்பு படிக்கிறார். பிரணவ் சமீபத்தில் சூரிய மின்சக்தி தகடுகளை, மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இணைத்து, தனது குடிசையில் விளக்கெரிய வைத்தான்.

இந்நிலையில், தனது தாய் நீண்ட தூரம் சென்று ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளான். கடப்பாரை, மண்வெட்டி, சிறு ஏணி ஒன்றை தயார் செய்து வீட்டு முற்றத்தில் கிணறு வெட்டும் பணியில் தனியாக களம் இறங்கினான். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிணறு தோண்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டான். உணவு சாப்பிடுவதற்காக 15 நிமிடங்கள் மட்டும் ஓய்வெடுத்தான். அதன்பின் நாள் முழுவதும் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டான்.

20 அடி ஆழம் தோண்டியதும் கிணற்றில் தண்ணீர் வந்தது. இதைப் பார்த்த பிரணவ் மகிழ்ச்சியடைந்தான். இந்த கிணறு தற்போது பிரணவ் குடும்பத்தின் பெருமையான சொத்தாக மாறியுள்ளது. இந்த கிணற்றை பார்க்க கெல்வே கிராமத்துக்கு பலர் வந்து செல்கின்றனர். பிரணவின் பள்ளி ஆசிரியரும், நேரில் வந்து கிணற்றை பார்வையிட்டு சென்றார். பிரணவின் சாதனையை பாராட்டிய கெல்வே கிராமத் தலைவர், பிரணவ் வீட்டுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

Pagetamil

திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் மதுப் போத்தல்: தாய்மாமன் அளித்த பரிசால் சர்ச்சை

Pagetamil

மறக்க முடியாத பழைய தோழி: திருமணமான 20 நாளில் காதல் மனைவி கொலை!

Pagetamil

இலங்கையிலிருந்து படகில் கடத்திச் செல்லப்பட்ட 33 Kg தங்கக்கட்டிகள்!

Pagetamil

மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும்: கேஜ்ரிவால் சந்திப்புக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் உறுதி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!