25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

தனுஷ்க குணதிலக மீதான 3 குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன!

சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு எதிரான, பல கடுமையான குற்றச்சாட்டுகளை பொலிசார் கைவிட்டதை அடுத்து நீதிமன்றத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

32 வயதான மெஸ்தியகே டான் தனுஷ்க குணதிலக்க, கடந்த ஆண்டு ரி20 உலகக் கோப்பையின் போது கைது செய்யப்பட்ட பின்னர், அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒரு பெண்ணுடன் டேட்டிங் செயலியில் பழகியதாகவும், குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் நவம்பர் 2 ஆம் திகதி சந்திப்பதற்கு முன்பு இருவரும் பல முறை அரட்டை அடித்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று வியாழன் அன்று, சிட்னி நீதிமன்றத்தில்  கிரிக்கெட் வீரருக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்றை போலீசார் கைவிட்டதாக அவரது சட்டத்தரணி அலென் சாஹினோவிச் தெரிவித்தார்.

தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி, வாய்க்குள் பலவந்தமாக ஆண்குறிறை நுழைந்து மூச்சுத் திணறடித்து, அனுமதியின்றி அவரது பெண்குறிக்குள், தனது ஆண்குறிறை பலவந்தமாக நுழைத்த ஒரே ஒரு குற்றச்சாட்டை குணதிலகா எதிர்கொண்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

மூன்று தடவைகள் பெண்ணிண் வாய்க்குள் ஆணுறுப்பை திணித்து மூச்சுத் திணறடித்த  குணதிலக, ஆணுறை அணியாமல் “பலவந்தமாக” உடலுறவில் ஈடுபட்டதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது. கடைசி நேரத்தில், பெண்ணின் சுவாசம் ஆறு வினாடிகளுக்கு தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

“எதையும் செய்ய நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றும், தனுஷ்கஆணுறை அணிய ஒப்புக்கொண்டால் மட்டுமே அவருடன் உடலுறவுக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் படுக்கைக்கு அருகில் தரையில் ஆணுறை இருப்பதைக் கண்டேன் என்று அந்தப் பெண் பொலிஸிடம் கூறினார்.

நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னர் குணதிலகவும் பெண்ணும் சிட்னி CBD இல் மது அருந்தியதாக நீதிமன்றத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் தனுஷ்க குணதிலக இன்று டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் வந்தார்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதிலிருந்து தனுஷ்க, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்.

அவர் முன்னர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்தார். டவுனிங் சென்டர் நீதிமன்றத்தால் 200,000 டொலர்உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு சர்வதேச புறப்பாடு புள்ளியையும் அணுக வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டார்.

குணதிலக மீண்டும் அதே நீதிமன்றத்தில் ஜூலை 13ஆம் திகதி ஆஜராவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

லிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

பெல்ஜியம் தீ விபத்தில் தமிழ் இளைஞன் பலி

Pagetamil

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சகோதரிகள் பலி

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

‘என்னை சேர் என அழைக்க வேண்டும்’: சைக்கோத்தனமாக நடந்த அர்ச்சுனா திங்கள் கைது?

Pagetamil

Leave a Comment