25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
இலங்கை

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்களும் திருட்டு: பொலிசில் முறைப்பாடு!

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கையில்-

1846 ஆம் ஆண்டு அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் தொடக்கம் உச்சவ காலங்களில் புஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

பின்னர்1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி எமது கிராமத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது கிராம மக்கள் வெளியேறி யாழ்குடா நாட்டில் உள்ள பல பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர் வாழ்ந்து வரும் காலத்தில் 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரனாலும் எமது கிராம மக்களின் முயற்சியினாலும் இந்த ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் இந்த ஆலயத்துக்கு சென்று வந்த போதும் நல்ல நிலையிலே ஆலயம் இருந்தது. ஆலய விக்கிரமங்களும் இருந்தன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்ற போது விக்கிரகங்கள் எல்லாம் நல்ல நிலையிலே இருந்ததன.

தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றோம் அப்படி இருக்கின்ற போது இப்பொழுது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி திருவம்பாவை தினத்திற்கு சென்ற பொழுது முருகன் சிலை காணாமல் போயிருந்தது

தற்போது முருகன் விக்கிரகம் காணாமல் போயுள்ளன. வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது. 24 மணி ஆளங்களும் ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ராணுவம் ஈடுபட்டிருக்கின்ற போது நாம் பூஜை வழிபாடுகளுக்கு செல்வதற்கு கூட ராணுவத்தின் அனுமதியினை பெற்று செல்கிறோம் இவ்வாறு நிலைமை இருக்கின்ற பொழுது குறித்த விக்கிரகங்கள் படிப்படியாக காணாமல் போனமைக்கான பிரதான காரணம் என்ன? இது தொடர்பாக பொலீஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றனர்.

இதற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் தான் சந்தேகப்பதாக ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கச்சதீவில் விகாரை கட்டப்பட்டது, வெடுக்குநாறிமலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலை உடைத்தெறிந்தது போன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்களும் சூறையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையில் சிறு முன்னேற்றம்!

Pagetamil

இன்று நிலப்பரப்புக்குள் நுழையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… மழை தொடரும்!

Pagetamil

2025ம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகள் இலங்கைக்கு அன்பளிப்பு

east pagetamil

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் நியமிப்பு

east pagetamil

Leave a Comment