அடுத்த 5 வருடங்களிற்கு கட்சியின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என சி.சிறிதரன் தெரிவிததார் என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்தப்பில் இதனை தெரிவித்தார்.
“2020 பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் சி.சிறிதரன் ஒரு ஊடக சந்திப்பில், அனைவரும் சேர்ந்து என்னிடம் கேட்டால் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக கூறினார்.
இதற்கு மறுநாள், நான் ஊடக சந்திப்பை நடத்திய போது, பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் இது பற்றி கேட்டார். சிறிதரன் கேட்பதை போல, அனைவரும் சேர்ந்து சிறிதரனை தலைவராகும்படி கேட்டால் எனது ஆதரவும் இருக்குமென்றேன். இப்பொழுதும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.
ஆனால், அதை தொடர்ந்து நடந்த முதலாவது மத்தியகுழு கூட்டத்தில், தான் அப்படியாக சொன்னது தவறென்றும், அதனால் தலைவருக்கு ஏதாவது மனச்சங்கடம் ஏற்பட்டால் மன்னிப்பு கோருவதாகவும் சிறிதரன் தெரிவித்திருந்தார். அத்துடன் 5 வருடங்களிற்கு எந்த பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என்றார்“ என சுமந்திரன் தெரிவித்தார்.