வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று பிற்பகல் நல்லூர் – நல்லூர் ஆதினம் முன்பாக சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சைவ மகா சபை பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார், மத குருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1