இலங்கை

வெடியரசன் கோட்டையில் கடற்படையின் அறிவித்தல் பதாகை அகற்றப்பட்டது; நெடுக்குநாறி சிவன் ஆலயம் மீளக்கட்டப்படும்: அமைச்சர் டக்ளஸ்!

இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஷ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தன்னோடு இணைந்து வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், தெரிவித்தார்.

அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி பேரூந்து மத்திய நிலையம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை போக்குவரத்து சபையினரும் தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே மக்களுக்கு சிறந்த சேவையை பேருந்து நிலையத்தினூடாக வாழங்கக்கூடியதாக இருக்கும்.

இந்த இரண்டு நிறுவனங்களும் மக்கள் சேவையை மனதில் கொள்ளாமல் இலாபமீட்டும் நோக்கில் செயற்படுவதாலேயே பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் பேருந்துகளில் பயணிப்போர் மாத்திரமல்ல வீதியில் செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே பிரதான வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பாக யாழ். மாவட்டத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது ஆராயவுள்ளதுடன், இது தொடர்பில் யாழ் உட்பட வடமாகாணத்தின் எனைய மாவட்ட தலைவர்களிடமும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் கேட்டுக்கொள்ள இருக்கின்றேன்.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!