கிழக்கு

காணிகளிலிருந்து வெளியேறுமாறு மிரட்டும் வன இலாகா!

‘இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின்’ கீழ் காணிகளை பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய முள்ளிவட்டவான் வாகநேரி கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பயணாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு வன இலகா திணைக்களத்தினர் அச்சுறுத்துவதாக பயணாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஊடக மன்றம் வாழைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட பயணாளிகளின் சார்பில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

2020 ஆண்டில் ஆட்சி புரிந்த ஜனாதிபதியின் திட்டத்தின்படி பயிர் செய்கைக்காக காணி கேட்டு விண்ணப்பித்திருந்தோம்.

அதன்படி 2022.06.16 ஆம் திகதி முள்ளிவட்டவான் கிராமத்தில் ½ ஏக்கர் அளவில் 17 பயணாளிகளுக்கு கோறளைப்பற்று தெற்று கிரான் பிரதேச செயலாளர் மற்றும் செயலக காணி அதிகாரிகளும் நேரடியாக வருகை தந்து காணியினை பகிர்ந்தளித்ததுடன் ஆவனமும் வழங்கியுள்ளனர்.

அதனை துப்பரவு செய்து பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபடும் போது வன இலகா அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் எந்தவொரு பயிர்செய்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என கூறுவதோடு சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஏனைய இடங்களில் அடையாளமிடபப்ட்டது போன்று எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான அளவைக் கல்லும் இடப்படவில்லை.ஏழை மக்களாகிய நாங்கள் கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தினை பயிர்செய்கை நடவடிக்கைக்கு செலவு செய்துள்ளோம்.தற்போது பலனின்றி போகும் நிலையில் உள்ளது.நாங்கள் எந்த அதிகாரியின் கதையினை கேட்பது என்று புரியாமல் உள்ளது.எனவே குறித்த விடயம் தொடர்பாக காணி வழங்கிய பிரதேச செயலக நிர்வாகத்திடம் நிலைமை தொடர்பாக தெரிவித்தபோதும் அவர்கள் பாராமுகமாக இருப்பது கவலையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த இரு தரப்பு அரச தினைக்கள நிர்வாகச் சிக்கலில் தாங்கள் அகப்பட்டு அவஸ்த்தைப்படுவதாகவும் மேற்குறித்த விடயம் தொடர்பான நிலைமைகளை கவனத்தில் கொண்டு மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் கவனமெடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் சுயாதீனாமாக பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தீர்வு பெற்றுத் தருமாறு கேட்கின்றனர்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சிக்கிய பலாப்பழ ஹெரோயின்

Pagetamil

அம்பாறையில் வளர்ப்பு புறா மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சி

Pagetamil

மட்டக்களப்பில் இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி: ATM உடைப்பு

Pagetamil

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை புறக்கணித்த கிழக்கு ஆளுனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!