25.9 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

‘கச்சதீவு தேவாலயத்தில் மிகுந்த பக்தியுடன் கடற்படையினர் சடங்குகள் செய்து வருகிறார்கள்’: புத்தர் சிலைக்கு கடற்படை புது விளக்கம்!

கச்சதீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் (27) விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்துக் கடற்படையினர் தெரிவித்ததாவது” கச்சதீவானது சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். இத்தீவின் பாதுகாப்புக் கருதி கடற்படைக் குழுவொன்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இக்கடற்படைக் குழுவினர் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை பௌத்த சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தயும் பாதுகாத்து வருகின்றனர்.

இத்தேவாலயமானது வருடாந்தப் பெருவிழாவின் போது மாத்திரமல்லாது தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் கடற்படையினர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகவே ஒரு சிறிய புத்தர் சிலையொன்று கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தேவாலயத்தைத் தவிர, இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் செய்ய முடியாது என்பதால் கடற்படையினர் தற்காலிகமாக கட்டப்பட்ட இராணுவ இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, இத் தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை, எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது” இவ்வாறு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment