கிழக்கு

மட்டக்களப்பு குருக்களிடம் பொலிஸ் வேடத்தில் கொள்ளை!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாரி அம்மன் கோவிலின் குருக்களிடம், பொலிசார் என கூறி கொள்ளையிட்ட நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

69 வயதான குருக்கள் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த இருவர், தாங்கள் பொலிசார் என்று கூறி அவரை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

அவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, பையில் இருந்த ரூ.110,000 ரொக்கம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குருக்கள் பழுகாமத்தில் வசிப்பவர். குருக்கள் மூலம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சிக்கிய பலாப்பழ ஹெரோயின்

Pagetamil

அம்பாறையில் வளர்ப்பு புறா மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சி

Pagetamil

மட்டக்களப்பில் இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி: ATM உடைப்பு

Pagetamil

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை புறக்கணித்த கிழக்கு ஆளுனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!