விளையாட்டு

தென்னாபிரிக்கா உலக சாதனை வெற்றி: ரி20 யில் உடைந்த சாதனைகள்; 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!

சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த ரி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தன. மேற்கிந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்களில் 258/5 என்று குவித்தது ஒரு சாதனை என்றால் அதை விரட்டிய தென்னாபிரிக்கா 259/4 என்று வெற்றி பெற்றது புதிய உலக சாதனையாகும்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியதில், கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். ஜோன்சன் சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் 118 ரன்கள் விளாசித்தள்ளினார். ரோவ்மென் போவெல் 19 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசினார். ரொமாரியோ ஷெப்பர்ட் 18 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 41 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 258 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணியில் குவிண்டன் டி கொக் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 100 ரன்களை விளாசினார். ரீசா ஹென்றிக்ஸ், 28 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார். கடைசியில் அய்டன் மார்க்ரம் 38 ரன்களை விளாச 18.5 ஓவர்களில் 259/4 என்று உலக சாதனை வெற்றி பெற்று தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

சாதனைத் துளிகள்:

* இதற்கு முன்பு சர்வதேசப் போட்டியில் 2018இல், நியூஸிலாந்துக்கு எதிராக 244 ரன்களை அவுஸ்திரேலியா சேஸ் செய்ததே சாதனை விரட்டலாகும்.

* ரி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் 500 ரன்களுக்கும் மேல் எடுக்கப்பட்டதும் நேற்று ஒரு புதிய உலக சாதனையாகும். அனைத்து ரி20 கிரிக்கெட்டிலும் இதுவே சாதனை. இதற்கு முன்னர் முல்டான் சுல்தான்ஸ், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 515 ரன்கள் குவிக்கப்பட்டதே சாதனை.

* தென்னாபிரிக்காவின் முந்தைய அதிகபட்ச ஸ்கோர் இங்கிலாந்துக்கு எதிரான 241/6. மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக 245/6 என்று எடுத்ததே அதிகபட்ச ரி20 ஸ்கோர்.

* தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் நேற்று 81 பவுண்டரிகள் அதிகபட்சமான சாதனையாகும். இதற்கு முன்னால் 78 பவுண்டரிகள் தனியார் ரி20 போட்டியில் சுல்தான்ஸ் அணிக்கும் கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் அடிக்கப்பட்டது.

* நேற்றைய போட்டியில் அடிக்கப்பட்ட 35 சிக்சர்கள் இன்னொரு ரி20 உலக சாதனையாகும். பல்கேரியா/ செர்பியா போட்டியில் இதற்கு முன்பு 33 சிக்சர்கள் விளாசப்பட்டதே அதிகம். மேற்கிந்தியத்தீவுகள் 22 சிக்சர்கள் விளாசியது, இது ஆப்கானிஸ்தான் அயர்லாந்துக்கு எதிராக 2019,ல் எடுக்கப்பட்ட சாதனையைச் சமன் செய்துள்ளது.

* பவர் ப்ளே முடிந்தவுடன் தென்னாபிரிக்காவின் ஸ்கோர் 102, 2021இல் மேற்கிந்தியத்தீவுகள் 98/4 என்று எடுத்ததே பவர் ப்ளே டி20 அதிகபட்ச ஸ்கோராகும்.

* 15 பந்துகளில் குவிண்டன் டி nகாக் அரைசதம் அடித்தார். இது ஒரு தென்னாபிரிக்கா சாதனையாகும். 2020இல் இங்கிலாந்துக்கு எதிராக 17 பந்தில் அரைசதம் விளாசினார்.

* அதே போல் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அதிரடி சத நாயகன் ஜோன்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதம் எடுத்தார், 39 பந்துகளில் சதம் விளாசிய 4வது வீரர் ஆனார் ஜோன்சன் சார்லஸ்.

* இதுவரை தென்னாபிரிக்கா, இந்தியா மட்டுமே 4 முறை 200+ இலக்கை வெற்றிகரமாக விரட்டிய அணிகளாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது

Pagetamil

SL vs AFG 1st ODI | இலங்கை சார்பில் அறிமுகமாகும் 2 வீரர்கள்!

Pagetamil

‘என்னால் தூங்கமுடியவில்லை’: கடைசி ஓவரை வீசிய குஜராத் அணியின் மோஹித் சர்மா வேதனை

Pagetamil

ஐபிஎல் 2023: விருதுகள் வென்ற வீரர்கள்!

Pagetamil

ஐபிஎல் 2023: சுவாரஸ்ய புள்ளிவிபரங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!