இலங்கையில் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து கொண்டு சட்டவிரோதமாக தமிழகத்திற்னு தப்பிச் சென்ற தம்பதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தண்டனையை இலங்கை சிறையில் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகமட் சிகாப், பாத்திமா பர்சானா தம்பதியினர் பிரிவெல்த் குளோபல் என்ற நிதி நிறுவனத்தின் நாடு முழுவதும் ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை சுருட்டிக் கொண்டு தமிழகம் தப்பிச் சென்றளர்.
அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து படகில் தப்பிச் சென்றனர். அவர்களை ஆட்கடத்திய வடமராட்சி வாசி சில வாரங்களின் முன் கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழகத்தில் சிக்கினார்.
அவர்கள் எந்த ஆவணங்களுமின்றி சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து வேதாரணியம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவர்கள் இருவரையும் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தி, இலங்கைச் சிறைகளில் இருவரின் தண்டனைக் காலத்தை அனுபவிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.