கிழக்கு

மாவடிப்பள்ளியில் இலைக்கறி பறித்துக் கொண்டிருந்தவர் முதலை கடித்து பலி

நேற்று மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி இலைக்கறி பறித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளார். சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த 61 வயதையுடைய 04 பிள்ளைகளின் தந்தையாகிய இராசப்பு சௌந்தராஜன் என்பரை முதலைத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மரணம் குறித்து கல்முனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் முதலைத் தாக்குதலில் உயிர் இழந்தவருக்கு நஸ்டஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை இன்று காலை 10.10 மணியளவில் பார்வையிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சிக்கிய பலாப்பழ ஹெரோயின்

Pagetamil

அம்பாறையில் வளர்ப்பு புறா மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சி

Pagetamil

மட்டக்களப்பில் இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி: ATM உடைப்பு

Pagetamil

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை புறக்கணித்த கிழக்கு ஆளுனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!