வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் நடைபெற்றது.
சம்பவத்தில் காரைநகர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் ( 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேசன் வேலை செய்யும் இவர், உடுப்பிட்டி பகுதியிலுள்ள ஐயர் ஒருவரின் வீட்டின் மேற்புறத்தில் பொம்மை ஒன்றை வைப்பதற்காக கம்பியை கொண்டு வேலை செய்யும் போது, தவறுதலாக கம்பி மின்மார்க்கத்துடன் தொடுகையுற்று மின்சாரத் தாக்குதலுக்குள்ளானார்.
குற்றுயிராக இருந்தவர் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1