குற்றம்

சுற்றுலா சென்ற இடத்தில் 25 வயது யுவதியில் மயங்கிய 47 வயது நபர்: ரூம் போட்டு ரூ.1.1 மில்லியன் கொள்ளையடித்த யுவதி!

சுற்றுலா சென்ற இடத்தில் அறிமுகமான 22 வயதான யுவதியுடன் ஹொட்டலில் அறையெடுத்து தங்கியிருந்த 47 வயதான நபரிடமிருந்து 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அவருடன் வந்து தங்கியிருந்த யுவதியே கைவரிசை காண்பித்துள்ளார்.

மாத்தறை, கம்புறுபிட்டிய, தலரம்ப பகுதியைச் சேர்ந்த பிரபலமான சிகை அலங்காரக்காரர் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

அவர் சில வாரங்களின் முன்னர் மாத்தறை, புறா தீவிற்கு பொழுதுபோக்காக சென்றுள்ளார். அங்கு அழகிய யுவதியொருவரை பார்த்து மனம் மயங்கியுள்ளார். அவருடன் அறிமுகமாகி, தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

25 வயதான அந்த யுவதியும், 47 வயதான சிகையலங்காரக்காரரும் தொலைபேசி இலக்கங்களையும் பரிமாறியுள்ளனர்.

இருவரும் தொலைபேசியில்  உரையாடி காதல் வசப்பட்டுள்ளனர். 47 வயது காதலனை நேரில் சந்தித்து பேச வேண்டுமென, 25 வயது யுவதி அடம்பிடித்து வந்தார்.

காதலியின் அன்புத்தொல்லையையடுத்து, கடந்த மார்ச் 18ஆம் திகதி கம்புருப்பிட்டியில் இருந்து மாத்தறைக்கு வந்திருந்த சிகையலங்காரர், மாத்தறை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் யுவதியை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசமாக இருந்த பின்னர், யுவதி தனக்கு புகைபிடிக்க கஞ்சா சுருட்டு தேவையென கேட்டுள்ளார்.

சிகையலங்காரருக்கு அந்த வலையமைப்புக்களுடன் தொடர்பில்லை. யாராவது கஞ்சா சுருட்டு விற்பவர்களை தெரியுமா என யுவதியிடம் கேட்டுள்ளார்.

யுவதி தொலைபேசி வழியாக தனக்கு தெரிந்த ஒருவரை ஹொட்டலுக்கு அழைத்துள்ளார்.  அந்த நபருடன் சென்று கஞ்சா சுருட்டு வாங்குமாறு காதலனிடம் கூறினார்.

புதிதாக வந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மாத்தறை எலியகந்த கடற்கரைக்கு காதலன் சென்றுள்ளார்.

பயணத்தின் இடையில், பின்னால் இருந்தவர் கண்ணாடி போத்தலால் முடிதிருத்தும் நபரின் தலையில் தாக்கியுள்ளார். அவர் கீழே விழுந்ததும், அவர் அணிந்திருந்த 450,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள், 34,100 ரூபா பெறுமதியான தொலைபேசி, 6,000 ரூபா மதிப்புள்ள கைக்கடிகாரம், 650,000 ரூபா மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

முடிதிருத்தும் நபர் ஞாயிற்றுக்கிழமை (19) மாத்தறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாத்தறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிகை அலங்காரக்காரருடன் ஹோட்டல் அறைக்கு சென்ற பெண் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், அவர் திட்டமிட்டு சிகை அலங்காரக்காரரை கொள்ளையடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முடிதிருத்தும் நபரை கொள்ளையடித்த நபர் அவரது உதவியாளர் என்றும், இருவரும் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியையும், காதலனையும் கத்தியால் குத்திய கணவன் கைது!

Pagetamil

பகல் பராமரிப்பு நிலையத்தில் 4 வயது சிறுமியிடம் கைவரிசை காட்டிய 74 வயது முதியவர் கைது!

Pagetamil

மன்னார் முச்சக்கர வண்டி சாரதி சங்க தலைவர் மீது தாக்குதல்

Pagetamil

நெல்லியடியில் மாணவிகளுடன் சேட்டை விடுவதை தொழிலாக கொண்ட 2 ரோமியோக்கள் கைது!

Pagetamil

முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட யுவதி 4 பேரால் கூட்டு வல்லுறவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!