இலங்கை

ஹரக் கட்டாவின் ரிட் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டமா அதிபர்

ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவிற்கு எதிராக வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஹரக் கட்டாவின் தந்தை, சட்டத்திற்கு உட்பட்டு கைதியின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, இந்த மனுவை பேணுவதற்கு எதிராக சட்டமா அதிபர் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர்.மரிக்கார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனையை ஏப்ரல் 4 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் போதைப்பொருள் மன்னன் நதுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா மற்றும் அவரது கூட்டாளியான சலிந்து மல்ஷிக குணரத்ன அல்லது குடு சலிந்து உட்பட எட்டு சந்தேக நபர்கள் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஹரக் கட்டா, குடு சலிந்து ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக CID காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற உதவி இன்ஜின் பொறியியலாளர் நெல்சன் மெர்வின் விக்கிரமரத்ன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பல நீதிமன்றங்களில் எட்டு கிரிமினல் வழக்குகளில் தனது மகன் சந்தேக நபராக அல்லது குற்றஞ்சாட்டப்பட்டதாக மனுதாரர் கூறினார்.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ், ‘கைதிக்கு’ ஒத்த சூழ்நிலையில் பொலிஸ் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டதாக மனுதாரர் குறிப்பிடுகிறார்.

எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பும் தாம் குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்தக் கூறப்பட்ட நபருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எவ்வாறாயினும், மேற்படி கொலைக்காக வந்ததாகக் கூறப்படும் கொலைக் குழு உறுப்பினர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை எனவும், மேற்படி கொலை தொடர்பான விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி தனுக நந்தசிறி, ஐரேஸ் செனவிரத்ன, சஞ்சய ஆரியதாச, மஞ்சுள பாலசூரிய ஆகியோர் முன்னிலையாகினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!