உலகம்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி: கோழிப் பாதங்களை சாப்பிடுமாறு மக்களை கேட்ட எகிப்பு அரசு!

எகிப்தில் பொருளாதார நெருக்கடி மோசமாகி வருவதால் பலரும் தினசரி உணவுக்கே சிரமப்படுகின்றனர். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், கோழிப் பாதங்களை சாப்பிடுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட எகிப்திய அரசின் உத்தரவு, மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து கடந்த ஐந்தாண்டுகளில் மிக மோசமான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது. அதன் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 30 சதவீதத்திற்கு மேல் சென்றது, இதனால் மக்கள் உணவுப் பொருட்களை, குறிப்பாக கோழிக்கறியை வாங்குவது கடினம்.

கடந்த 12 மாதங்களில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது எகிப்திய பவுண்ட் பாதி மதிப்பை இழந்துள்ளது.

100 மில்லியன் மக்கள்தொகைக்கு உணவளிக்க எகிப்து உணவு இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருப்பதால், பணமதிப்பு வீழ்ச்சி உணவுப் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது, இதன் விளைவாக, எண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி உட்பட சில பொருட்களின் விலை இருமடங்காக அல்லது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தேசிய ஊட்டச்சத்துக்கான தேசிய நிறுவனம் ஜனவரி மாதம் கோழிப் பாதங்களை சாப்பிடுவதற்கு மக்களை அழைத்தது.

கோழிப் பாதங்கள் புரதச்சத்து நிறைந்தவை என்றாலும் அவை பொதுவாக நாய்களுக்கும் பூனைகளுக்குமே அளிக்கப்படுபவை.

இந்த உத்தரவு குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள தீவிர வறுமையின் அடையாளமாகக் கருதப்படும் உணவுகளை உட்கொள்ளுமாஞ அரசாங்கம் தங்களை கேட்கும் என்று நம்ப முடியவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.

ஒரு கிலோ  கோழியிறைச்சி தற்போது இலங்கை ரூபாவில் 1,900 வரை விற்கப்படுகிறது. முட்டை இலங்கை ரூபாவில் 60 வரை விற்கப்படுகிறது.

இந்த நிலைமைக்கு மக்கள் அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டினாலும், ஜனாதிபதி அத்புல் ஃபத்தா அல்-சிசி தனது நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரமின்மைக்கு 2011 எகிப்திய எழுச்சி மற்றும் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை அடிக்கடி குற்றம் சாட்டுகிறார். கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் நடந்த போரையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உலகின் இரண்டாவது பெரிய கோதுமை இறக்குமதியாளராக எகிப்து உள்ளது. அதன் இரண்டு முதன்மை சப்ளையர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன். இருப்பினும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த போர் எகிப்துக்கான ஏற்றுமதியை சீர்குலைத்தது.

மேலும், ரஷ்ய மற்றும் உக்ரைனிய சுற்றுலா பயணிகளையே எகிப்தின் சுற்றுலாத் துறை பெருமளவு சார்ந்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதத்தை உருவாக்கும் சுற்றுலாத் துறைக்கு போர் கடுமையான அடியைக் கொடுத்தது, இது ஏற்கனவே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

Pagetamil

உக்ரைனின் கடைசிப் போர்க்கப்பலையும் அழித்தது ரஷ்யா

Pagetamil

சூடான் போர் நிறுத்தத்திலிருந்து இராணுவம் விலகுகிறது!

Pagetamil

வடக்கு கொசோவாவுக்கு கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது நேட்டோ

Pagetamil

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மீது உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் முயற்சி தோல்வி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!