சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று ரஷ்யாவுக்குச் செல்கிறார்.
ஜியை நீண்டகால நல்ல நண்பராக வருணித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இருவருக்கும் இடையிலான சந்திப்பின் மீது அதிக நம்பிக்கையை வைத்திருப்பதாக கூறினார்.
சீனாவுடனான ரஷ்யாவின் உறவில் எந்தக் கட்டுப்பாடும், சர்ச்சைக்குரிய விவகாரங்களும் இல்லை என்றும் கூறினார்.
சென்ற ஆண்டு பெப்ரவரி இறுதிப்பகுதியில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ஜி ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. சீனாவின் ஜனாதிபதியாக 3வது முறையாக தெரிவாகிய பின்னர் அவரது முதலாவது வெளிநாட்டு பயணம் இது.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் 2 முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா- உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர, சீனா 12 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த பயணத்தில் ஜி சமாதான நடவடிக்கையை முன்னெடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.