இலங்கை

சமூக சீர்கேட்டில் ஈடுபடுபவர்களின் சொர்க்கபுரியான அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பனிக்கன்குளம் கிராமத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 2012இல் அரச காணியில் 54 காணித்துண்டுகள் வழங்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா கடனும் வழங்கப்பட்டு அமைக்கப்பட்ட வீடுகளில் எவரும் குடியேறாத நிலையில் பாழடைந்து காணப்படுவதோடு, சமூக சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட அரச உத்தியோகத்தகர்களுக்கு ஏ9 பிரதான
வீதியில் பனிக்கன்குளம் பகுதியில் 54 காணித் துண்டுகள் வழங்கப்பட்டு
வீடுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அன்று தொடக்கம் இன்றுவரை குறித்த வீடுகளில்
பல முழுமையாக அமைக்கப்படாதுள்ள நிலையில் சில வீடுகள் முழுமையாக
புனரமைக்கப்பட்ட போதும் அதில் எவரும் குடியேறவில்லை.

இதனால் குறித்த வீடுகள் அனைத்தும் பாழடைந்து காணப்படுவதோடு வீட்டிற்குள்
பெரியளவவில் புற்றுகள் வளர்ந்து காணப்படுகிறது. அத்தோடு மிக அதிகளவான
சமூக சீர்கேடுகளுக்கு வசதியாகவும் குறித்த வீடுகள் அதற்கென்றே அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் போன்று செயற்பாடுகள் காணப்படுவதாகவும் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் என்பன உரிய கவனம் செலுத்தி குறித்த வீடுகளை இதுவரை வீடுத்திட்ட உதவியினை பெறாதுள்ள வறிய குடும்பங்களுக்கு மாற்றம் செய்ய முன்வர வேண்டும் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயனை
தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த வீடுகள் யாருக்கு யாருக்கு வழங்கப்பட்டதோ அவர்களை குடியேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அல்லது அவர்கள் குடியேறாத சந்தர்ப்பத்தில் காணியற்ற ஏனை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் குறித்த நடவடிக்கைகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!