29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

தேர்தலுக்கு நிதி வழங்காத நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தேர்தலுக்கு பணம் வழங்காத நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஊடாக பதிவுத் தபாலில் கடிதம் ஒன்றை அனுப்பி நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு அவர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை 2023 மார்ச் 14 ஆம் திகதி முதல் தவணை முறையில் வழங்குமாறு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2023 பெப்ரவரி 13 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தேவையான பணத்தை விடுவிக்க முடியாது எனவும், பணத்தை விடுவிப்பதற்கு நிதி அமைச்சரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் பதில் கடிதம் மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

பணத்தை மட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை தீர்மானம் மற்றும் ஒரே நேரத்தில் பணத்தை வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்த விபரங்களை நிதியமைச்சின் செயலாளர் சத்தியக் கடதாசியாக சமர்ப்பித்ததையும் இது காட்டுகிறது.

இவ்வாறு, நிதியமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றத்தை அவமதித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 105வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்திருப்பதால், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முட்டைகளில் தயாரிக்கப்படும் கேக்கை வாங்காதீர்கள்!

Pagetamil

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!