340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, அந்த 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் வரவுள்ளது.
இது தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதுடன் மக்களின் தேவைகளை பிரச்சினையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை பணம் கிடைக்காததால் பணிகள் தாமதமாகும் என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே கூறுகிறார்.
அதன்படி, உள்ளூராட்சி அமைப்புகளுக்கு ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த முடியாது.
எவ்வாறாயினும், இந்த 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அந்த கால அவகாசம் முடிவடைந்ததன் பின்னர் மாநகர, நகரசபை ஆணையாளர்கள் மற்றும் பிரதேசசபை செயலாளர்களின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.