Site icon Pagetamil

வெலிங்டன் டெஸ்ட்: 580/4… ஒருநாள் போட்டி பாணியில் ஆடி டிக்ளேர் செய்தது நியூசிலாந்து!

வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து முதலாவது இன்னிங்ஸில் 580/4 என நியூசிலாந்து டிக்ளேர் செய்துள்ளது.

ஆட்டத்தின் முதல்நாளில் இலங்கை அணியால் 2 விக்கெட்டுக்களை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இன்று மேலதிகமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

நியூசிலாந்து 4 விக்கெட்டுக்களை இழந்து 580 ஓட்டங்களை குவித்தது. முதலாவது டெஸ்டில் இலங்கையிடமிருந்து வெற்றியை பறிந்த கேன் வில்லியம்ஸன் இந்த டெஸ்டில் 215 ஓட்டங்களை குவித்தார். ஹென்ரி நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களை குவித்தார். இருவரும் 363 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

123 ஓவர்கள் ஆடிய நியூசிலாந்து, கிட்டத்தட்ட ஒருநாள் ஆட்டத்தை போல 4.71 என்ற ரன் ரேட்டில் ஓட்டங்களை குவித்துள்ளது.

பந்துவீச்சில் கசுன் ராஜித 126 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை ஒரு விக்கெட்டை இழந்து 18 ஓட்டங்களுடன் ஆடி வருகிறது.

 

Exit mobile version