மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்துள்ள அரச நிறுவனங்கள், வங்கிக் கணக்குகளை நீக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக வெளியான செய்தி போலியானது என தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை ஐ.தே.க பிரமுகர்கள் உரிமையாளர்களாக உள்ள ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அண்மையில் நடந்த வேலைநிறுத்தத்தில் மக்கள் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டதையடுத்து இந்த செய்தி பரப்பப்பட்டது.
எனினும், இது போலியானது என இலங்கை மக்கள் வங்கி தெரிவுபடுத்தியுள்ளது.
தொடர்பான அறிக்கைகளை மக்கள் வங்கி நிராகரித்துள்ளது.
வங்கியுடனான அவர்களின் கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் பெறப்படவில்லை என்று வங்கி தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1