2023ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 16ஆம் திகதி வரை முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நடைபெறும்.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக, மே மாதம் 13 ஆம் திகதி முதல், மே மாதம் 24 ஆம் திகதிவரை, முதலாம் தவணையின் இரண்டாம்கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை காரணமாக 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 12 வரை வழங்கப்படும்.
இதன்படி மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை வழங்கப்படும். அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.