29.5 C
Jaffna
March 27, 2023
சினிமா

தனுஷின் ‘வாத்தி’ உலகம் முழுவதும் ரூ.118 கோடி வசூல்

நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் உலக அளவில் ரூ.118 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தகதி தமிழ், தெலுங்கில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியிடபட்டது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படம் 8 நாட்களில் ரூ.75 கோடியை வசூலித்ததாக படத்தின் இயக்குநர் அதிகாரபூர்வமாக படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்திருந்தார்.

படம் வெளியாகி இன்றுடன் ஒருமாதம் கடந்த நிலையில் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான ‘வாத்தி’ உலக அளவில் ரூ.118 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாயிஷாவின் நடனத்தில் ‘பத்து தல’ படத்தின் ‘ராவடி’ பாடல் வீடியோ

Pagetamil

அஜித் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்

Pagetamil

மார்ச் 29 இல் ‘பொன்னியின் செல்வன் 2’ ட்ரெய்லர் வெளியீடு

Pagetamil

நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட்

Pagetamil

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!