பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டத்தரணி க.சுகாஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களின் முன்னர் சட்டத்தரணி க.சுகாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், சுகாஷின் காரை வழிமறித்து பொலிஸ்காரர் ஒருவர் சோதனையிட முயல, சுகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார்.
போக்குவரத்து பொலிசார் மட்டுமே வாகன ஆவணங்களை பரிசோதிக்கலாமென சுகாஷ் அதில் குறிப்பிட்டிருந்தார்.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குறிப்பிட்டு, வல்வெட்டித்துறை பொலிசார், பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுகாஷ் மீது குற்றப்பத்திரம் சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், அவரை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.