29.5 C
Jaffna
March 27, 2023
சினிமா

கணவர் வீட்டை சிறைச்சாலையாக உணர்ந்த சமந்தா!

நாக சைதன்யா குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளினால், இரும்புக் கூண்டுக்குள் வாழ்வதை போல சமந்தா உணர்ந்ததாக சினிமா விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர்  அக்கினேனி நாக சைதன்யாவுடன் திருமணம் செய்து, விவாகரத்தானார். இரண்டு வருடங்களின் முன்னர் இருவரும் விவாகரத்தானார்கள்.

அவர்களின் திருமண வாழ்க்கை பற்றி பல தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. எனினும், நாகசைதன்யாவோ, சமந்தாவோ அதை பகிரங்கமாக ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் அக்கினேனி குடும்பத்தினரால் சமந்தா சித்திரவதை செய்யப்பட்டதாக ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

திரைப்பட மற்றும் பேஷன் விமர்சகர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் உமைர் சந்து, தனது ருவிற்றரில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் கூற்றுப்படி, நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் பழமைவாதிகள். அவர்களுடன் ஒரு கூண்டில் வாழ்வது போல் உணர்கிறேன். தைரியமான படங்கள் வேண்டாம். இந்த மாதிரியான ஆடைகளை அணியாதீர்கள், இரவு பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள், ஐட்டம் பாடல் காட்சிகளில் ஆடாதீர்கள் என கட்டுப்பாடுகள் விதித்தனர்.

அக்கினேனி வீட்டில் வசிக்கும் போது, அக்கினேனி குடும்ப உறுப்பினர்களுடன் கூண்டில் வாழ்வது போல் சமந்தா உணர்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, உமைர் சந்து மற்றெரு ருவீட் செய்திருந்தார். அதில், நாக சைதன்யா தன்னை மோசமாக துஷ்பிரயோகம் செய்தார். அவர் எப்போதும் மோசமான கணவர். நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்தேன் ஆனால் கருக்கலைப்பு செய்தேன். கடவுளுக்கு நன்றி, நான் விவாகரத்து செய்துவிட்டு நகர்ந்தேன் என சமந்தா குறிப்பிட்டார் என அதில் தெரிவித்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாயிஷாவின் நடனத்தில் ‘பத்து தல’ படத்தின் ‘ராவடி’ பாடல் வீடியோ

Pagetamil

அஜித் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்

Pagetamil

மார்ச் 29 இல் ‘பொன்னியின் செல்வன் 2’ ட்ரெய்லர் வெளியீடு

Pagetamil

நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட்

Pagetamil

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!