29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

இலங்கையில் பெண்கள் அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரத்திற்கு வருகின்றனர்: முன்னாள் எம்பி சந்திரகுமார்

இலங்கையை பொருத்தவரை பெரும்பாலான பெண்கள் கணவன் அல்லது தந்தையின்
மறைவுக்கு பின்னரான அனுதாபங்கள் மூலமே அரசியல் அதிகாரங்களுக்கு
வந்துள்ளனர். இந்த நிலைமை மாற்றப்படவேண்டும் பெண்களின் அரசியல்
அதிகாரங்களுக்கு ஆளுமையின் ஊடாக பிரவேசிக்க வேண்டும் என முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.
சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (18) வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற சமத்துவக் கட்சியின்
சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

உலகில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என நாம்
பெருமைப்பட்டுள்கொள்கின்றோமே தவிர அரசியில் பெண்களுக்கு போதுமான
வாய்ப்புக்களை வழங்குவதற்கு இந்த நாடு இன்னமும் தயாராக இல்லை. ஒரு சில
இஸ்ஸாமிய நாடுகளில் அரசியலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள
வாய்ப்புக்கள் போன்று கூட இலங்கயைில் வழங்கப்படவில்லை என்பது
கவலைக்குகரியது. இலங்கையின் வாக்காளர்களில் அதிகளவில் பெண் வாக்காளர்கள்
உள்ள போது இந்த வாய்ப்பு மறுப்பு என்பது தொடர்ச்சியாக காணப்படுகிறது.
எனத் தெரிவித்த அவர்

எங்களுடைய சமத்துவக் கட்சியை பொறுத்தவரை பெண்களுக்கு நாம் அதிக
முக்கியத்துவம் கொடுத்த கட்சியாக காணப்படுகின்றோம். உள்ளுராட்சி
மன்றங்களில் கூட அதிகளவில் எங்களுடைய கட்சி பெண்களே உறுப்பினர்களாக
உள்ளனர். நாம் கட்சியின் பெயரில் மாத்திரம் சமத்துவத்தை
கொண்டிருக்கவில்லை செயற்பாடுகளிலும் அதனை நிரூபித்துள்ளோம் எனவும்
குறிப்பிட்டார்.

சமத்துவக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜாக்குவின் லூசியா
தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முட்டைகளில் தயாரிக்கப்படும் கேக்கை வாங்காதீர்கள்!

Pagetamil

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!