படகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று (17) இரவு உயிரிழந்துள்ளார்.
படகொட பகுதியிலுள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் முடிவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருண மங்கள ஜயவர்தன என்ற 37 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலும் இருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1