29.5 C
Jaffna
March 27, 2023
முக்கியச் செய்திகள்

21ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அறிவிப்பு!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்திற்குப் பின்னர் இது அறிவிக்கப்படும்.

கொழும்பில் மார்ச் 21 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 08.00 மணிக்கு விசேட செய்தியாளர் மாநாடு நடைபெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக இன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, ஆசியா மற்றும் பசுபிக் திணைக்களத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை, ஆசியா மற்றும் பசுபிக் திணைக்களத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கைக்கான ஆதரவை வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற்று, தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே கூறியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘கச்சதீவு தேவாலயத்தில் மிகுந்த பக்தியுடன் கடற்படையினர் சடங்குகள் செய்து வருகிறார்கள்’: புத்தர் சிலைக்கு கடற்படை புது விளக்கம்!

Pagetamil

சிறை தண்டனையின் எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

Pagetamil

இன்னும் சுயாட்சி கிடைக்காத பகுதியாக தமிழர் பகுதியை பிரகடனப்படுத்துங்கள்: ஐ.நாவில் கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று பேசப்பட்ட விடயங்கள் என்ன?

Pagetamil

ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!