சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் ரஷ்யா பயணம் அடுத்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அரசு முறை பயணமாக மார்ச் 20-22 வரை ரஷ்யாவில் இருப்பார் என்று கிரெம்ளின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னதாக ஜியை நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
உக்ரைனில் அமைதி முயற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக சீனா அறிவித்ததை தொடர்ந்த, இந்த விஜயம் வந்துள்ளது.
ரஷ்ய பயணத்திற்குப் பிறகு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஜி பேச உள்ளார்.
“பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விரிவான கூட்டாண்மை உறவுகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது பற்றி அவர்கள் விவாதிப்பார்கள்” என்று கிரெம்ளின் கூறியது.
“பல முக்கிய இருதரப்பு ஆவணங்களில் கையெழுத்திடப்படும்” என்று அது மேலும் கூறியது.
முன்னதாக, இந்த பயணம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. கடந்த மாதம் ஜியின் வருகை குறித்து புடின் பேசியிருந்தார், ஆனால் உறுதியான திகதி எதுவும் வழங்கப்படவில்லை. மத்திய ஆசியாவில் நடந்த உச்சிமாநாட்டின் போது 2022 செப்டம்பரில் ஜி கடைசியாக புடினை சந்தித்தார்.
பெப்ரவரி 2022 இல் புடின் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்காக பெய்ஜிங்கிற்குச் சென்றபோது சீனாவும் ரஷ்யாவும் தமது கூட்டுக்கு “வரம்புகள் இல்லை” என அறிவித்தன.
இரு தரப்பினரும் தொடர்ந்து தங்கள் உறவுகளின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டில் செழித்தோங்கியது, சீனா ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாங்குபவராக உள்ளது.