வீரபுர பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் இருந்த 32 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடன் இருந்த மாணவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர்.
இந்த மாணவி ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீரபுர பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் சிறுமியுடன் ஆண் நபர் ஒருவரை பார்த்து சாலியவெவ பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சாலியவெவ காவற்துறையின் குழுவொன்று வனப்பகுதிக்கு சென்று காட்டுக்குள் சென்று சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்ததுடன் சிறுமியும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சிறுமி பாடசாலையை முடித்துக் கொண்டு இவருடன் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.